தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தந்தை மற்றும் நடிகருமான கிருஷ்ணா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை மருத்துவமனைகளுடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு வழங்கியுள்ளார்.
தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி தான் உள்ளது.
இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு கிராம மக்களும் சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார். மேலும்மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனை, மகேஷ் பாபு பெருமையுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
unknown node