சென்னை :பிரியங்கா vs மணிமேகலை பிரச்சினையில் ஒரு சில பிரபலங்கள் மணிமேகலைக்கு ஆதரவாகப் பேசினார்கள். மற்றொரு புறம் பிரியங்காவுக்கு ஆதரவாகவும் பேசியிருந்தார்கள். குறிப்பாக, சுனிதா, பாவனி, குரேஷி, மாகாபா ஆனந்த், ஆகியோர் பேசியிருந்தார்கள்.
இதன் காரணமாக, ஏற்கனவே, விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தான் ஆதிக்கம் செலுத்துகிறார் எனவும், இதனால், அவருக்கு ஆதரவாகப் பேசினால் தான் தங்களுக்கு நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் பிரியங்காவுக்கு அவர்கள் ஆதரவு கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
குறிப்பாக, பிரியங்காவுக்கு ஆதரவாகப் பேசியவர்களைச் சூசகமாகக் கலாய்க்கும் வகையில், சொம்பு ஒன்றை வைத்து மணிமேகலை வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இதன் காரணமாக, பிரியங்கா மீதும் அவருக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்கள் மீதுமே எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், மாகாபா ஆனந்த் மற்றும் குரேஷி இருவருக்கும் புது நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக முன்னாள் போட்டியாளர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டு அதில் அவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியை, மாகாபா ஆனந்த் மற்றும் குரேஷி இருவரும் தான் தொகுத்து வழங்கி இருக்கிறார்கள். அதற்கான லீக் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலரும், மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு இருவரும் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி வருகிறார்கள்.
ஆனால், அது ஒரு புறம் இருந்தாலும், ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. எனவே, இதனை ஒரு காரணமாக வைத்து விமர்சிப்பது நியாயமில்லாத ஒன்று எனவும் மற்றொரு பக்கம் பேசி வருகிறார்கள்.
unknown node