நடிகர் மாதவன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகர் மாதவன், மதுரை கோவில் திருவிழாவில் மக்கள் ஆம்புலன்சுக்கு வழிவிட்ட விடீயோவை ட்வீட்டரில் பார்த்துவிட்டு, அந்த விடியோவுக்கு “இந்தியா ஒளிர்கிறது” என ட்வீட் செய்துள்ளார்.
இந்த விடியோவை பார்த்த பல பிரபலங்கள் பாராட்டியுள்ள நிலையில், மாதவனின் ட்வீட்டை பார்த்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் பொதுமக்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் இப்படி திருவிழாக்களுக்கு ஏற்பாடு செய்வதை பார்த்தால், நாம் 2019ம் ஆண்டில் அல்ல, மாறாக 1959ம் ஆண்டில் தான் உள்ளோம் என்பது தெரிகிறது.” என ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகர் மாதவன், “இந்த வீடியோவில் இருக்கும் நல்லது, எங்கள் மக்களின் சிறப்பு. லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் உங்களுக்கு புரியாது. உங்களின் ட்வீட்டுகள் எதுவுமே பாசிட்டிவாக இல்லை. அதனால் உங்களுக்கு விளக்கி பலன் இல்லை.” என தெரிவித்துள்ளார்.