மாயி திரைப்பட இயக்குனர் சூர்ய பிரகாஷ் மறைவு – சரத்குமார் வேதனை.!

சூர்ய பிரகாஷ் : மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலமானார்.

Maayi director - Surya Prakash

சூர்ய பிரகாஷ் :மாணிக்கம், மாயி, திவான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சூர்ய பிரகாஷ் இன்று காலமானார்.

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த ‘மாயி’ படத்தின் இயக்குநர் சூர்ய பிரகாஷ் மாரடைப்பால் காலமானார். 1996-ஆம் ஆண்டு ராஜ்கிரண் நடிப்பில் வெளியான ‘மாணிக்கம்’ படத்தை இயக்கி திரையுலகில் அறிமுகமான சூர்ய பிரகாஷ், பெண் ஒன்று கண்டேன், திவான், அதிபர், வருஷ நாடு ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவரது மரணத்திற்கு சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்குகள் குறித்த தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சூர்ய பிரகாஷ் மறைவுக்கு நடிகர் சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சரத்குமார, “என்னுடைய நடிப்பில் மாயி , திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய என் அன்பு நண்பர் சூர்யபிரகாஷ் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவரது திடீர் மறைவு என்னை நிலைகுலையச் செய்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

இயக்கிய திரைப்படங்கள்

தமிழில் ராஜ்கிரண், வனிதா விஜயகுமார் நடித்த ‘மாணிக்கம்’, சரத்குமார் நடித்த ‘மாயி’, ‘திவான்’, ஜீவன் நடித்த ‘அதிபர்’, புதுமுகங்கள் நடித்த ‘வருசநாடு’, தெலுங்கில் டாக்டர் ராஜசேகர், மீனா நடித்த பரத்சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.