இன்னொருமுறை பாருங்க... கோப்ரா பிடிக்கும்.! ரசிகர்களின் விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி,.!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில்

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் என பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

unknown node

படத்தை செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரிதாக நல்ல விமர்சனங்களை பெறவில்லை. படம் பார்த்த பலரும் கலவையான விமர்சனங்களை தான் கூறி வருகிறார்கள்.

unknown node

இந்த நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து, தனது இன்ஸ்டாகிராமில் “கோப்ரா” திரைப்படம் பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ஒருவர் படத்தின் திரைக்கதை குழப்பாக உள்ளது என்று கேட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்-வேட்டைக்கு தயாரான கமல்ஹாசன்.! வெளியான சூப்பரான வீடியோ… முழு விவரம் இதோ…

unknown node

அதற்கு பதில் அளித்த இயக்குனர் “நான் இதற்காக முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஒரு பார்வையாளராக சிந்திக்க வைக்கும் படங்கள் ரொம்ப பிடிக்கும். இப்படத்தில் நேர்மையான முறையில் முயற்சி செய்திருந்தேன். வாய்ப்பிருந்தால் இன்னொருமுறை படத்தைப் பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறன்” என்று கூறியுள்ளார்.