லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், படக்குழு தீவிரமான ப்ரோமோஷன் பணியில் களமிறங்கியுள்ளது.
unknown nodeஇந்த நிலையில், நேற்று சென்னை போயஸ் கார்டன் வீட்டில் ரஜினி காந்தை நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மகேந்திரன் ஆகியோர் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeரஜினி ,கமல் இருவரும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவர்க்கும் தெரியும். இவர்களின் நட்பை பார்த்து வியந்த லோகேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் “நன்றி! கமல் சார், ரஜினி சார். என்ன ஒரு நட்பு. இது எனக்கு ஊக்கமளிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node