லோக்கலா இருக்குமேனு பண்ணது...அதுக்காக இப்ப நான் வருத்தப்படுகிறேன் – இயக்குனர் ஹரி.!

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம்,

தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுப்பதில் சிறந்த இயக்குனர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளியான ஐயா, அருள், சாமி, வேல், தாமிரபரணி, கோவில், சிங்கம், உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்து, ஒரு நல்ல கிராமத்து படத்தை பார்த்த முழு திருப்தியை கொடுத்தது.

unknown node

இதில் விக்ரம் நடிப்பில்,  கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான சாமி படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் வரும் சண்டைக்காட்சி, விக்ரமின் என்ட்ரி, அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

unknown node

இந்த நிலையில், இப்படம் குறித்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த ஹரி ” சாமி படத்தில் விக்ரம் வரும் அறிமுக காட்சியிலே இட்லியில் பீர் ஊத்தி சாப்பிடுவாரு. அது அப்போதைக்கு லோக்கலா இருக்குமேனு நினைச்சு எடுத்தது. ஆனா அதுக்காக இப்ப நான் வருத்தப்படுறேன்.

unknown node

ஏனென்றால், நான் போதைப் பழக்கத்திற்கும் மதுவுக்கும் எதிரானவன். இனிமே வர சந்ததிகளையாச்சும் இது எல்லாம் இல்லாம நல்ல வழியில கூட்டிட்டு போவோம்” என தெரிவித்துள்ளார். மேலும் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் நேற்று வெளியான யானை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .