ஏப்ரல் மாதம் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல்..!

Sultan, Lapam, Karnan, Palace 4, Doctor will be released in April.

வருகின்ற ஏப்ரல் மாதம் சுல்தான்,லாபம், கர்ணன், அரண்மனை 4, டாக்டர் ஆகிய திரைப்படங்கள் திரையங்குகளில் வெளியாகவுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் போன்ற திரைப்படங்கள் ஒடிடியில் ரிலீஸ் ஆனது. இதில் சில திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்று நல்ல சாதனைகளையும் படைத்தது. அதனையடுத்து சமீபத்தில் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து முதல் படமாக விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ரிலீஸானது .ஆனால் எதிர்பார்த்ததை விட வசூலில் மாஸ்டர் திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில், தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களின் பட்டியலை பற்றிபார்ப்போம். முதலாவதாக கார்த்தி நடித்துள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியிட்டு நேற்று அறிவித்தனர். அதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன். மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம். அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள லாபம் மற்றும் அரண்மனை படத்தின் மூன்றாவது பாகம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளார்கள்.