காமெடிக்கு பஞ்சமே இருக்காது போலயே.! சிவகார்த்திகேயனின் டான் படத்தில் இணைந்த 3 காமெடி நடிகர்கள்.!

Comedians Munish Kant, Bala and Kali Venkat have teamed up for Sivakarthikeyan's next Don film.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவிருக்கும் டான் படத்தில் காமெடி நடிகர்களான முனீஷ்காந்த் ,பாலா மற்றும் காளி வெங்கட் ஆகியோர் இணைந்துள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் மற்றும் அயலான் . இதில் டாக்டர் திரைப்படம் மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். அயலான் திரைப்படம் வருகின்ற கிருஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் அட்லியின் உதவி இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் ‘டான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.அந்த படத்திற்கும் அனிருத் இசையமைப்பதாகவும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கான ஒரு வீடியோவும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்ப்பு கிடைத்தது.

கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர்.நாளை பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது டான் படத்தில் சூரியை தவிர மூன்று காமெடி நடிகர்கள் இணைந்துள்ளனர் .ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் படத்தில் முனீஷ்காந்த்,காளி வெங்கட் மற்றும் பாலா ஆகியோர் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து டான் திரைப்படத்தில் காமெடி அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

unknown node