இலங்கையை ஆண்ட கடைசி மன்னரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது….!!!
இலங்கையை கடைசியாக ஆண்ட மன்னர் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. விக்கிரம ராஜசிங்கனின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் முன்னணி சிங்கள திரைப்பட இயக்குனரால் தயாரிக்கப்பட்டுள்ளதால், இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் இயக்குனரான தேவேந்திர கோங்கஹாகே இந்த படத்தில் மன்னனாக நடித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து அவர் கூறுகையில், இந்த படத்தை தயாரிப்பதற்காக நான்கு ஆண்டுகள் ஸ்ரீ விக்கிரமசிங்கனின் வாழ்க்கை வரலாற்றை ஆய்வு செய்து வந்ததாக கூறியுள்ளார்.
இந்த படத்தை விக்கிரமசிங்கனின் வாரிசுகளுக்கு போட்டு காட்டப்படவுள்ளதாகவும் இந்த படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.