பிக் பாஸ் சீசன் 5 தமிழின் ப்ரோமோவை கமல் ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் . அதன் பின் நான்காவது சீசன் கடந்த ஆண்டு முடிந்தது, அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து 5- வது சீசன் எப்போது தான் தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான ப்ரோமோ ஒன்றை கமல் ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், விக்ரம் படத்தின் மியூசிக் உடன் கமல் ஆரம்பிக்கலாமா..? என கேட்கிறார். அதன் பின் பிக் பாஸ் 5-வது சீஸனின் லோகோவுடன் விரைவில் என வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
unknown node