"ஆரம்பிக்கலாங்களா" விக்ரம் படத்தின் வெறித்தனமான அப்டேட்..!!

Filming for Vikram, starring Kamal Haasan, is set to begin at the end of April

கமல்ஹாசன் நடிக்கவுள்ள விக்ரம் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் இறுதியில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.

அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் தற்போது இனைய வாய்ப்பில்லை. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது ஆம், இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கி விரைவில் படத்தை முடித்துவிட்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி படத்தை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.