முதலில் உயிர்பிழைப்போம்! அப்புறம் கொண்டாடலாம் – இயக்குனர் லோகேஸ் கனகராஜ்

Default Image

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். 
இந்நிலையில், இப்படம் கடந்த வாரம் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணாமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இப்படம் வெளியாகவில்லை. ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். இதற்க்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‘முதலில் உயிர்பிழைப்போம். அப்புறம் கொண்டாடலாம்.’ என்றும், விரைவில் படம் திரைக்கு வரும். அதுவரை பொறுத்திருங்கள்.’ என ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்