சோகம்…! பழம்பெரும் நடிகை சுலோச்சனா காலமானார்.! இன்று மாலை இறுதி சடங்கு..

பத்மஸ்ரீ விருது பெற்ற பழம்பெரும் நடிகை சுலோச்சனா நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5.30க்கு தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த சுலோச்சனாவின் மகள் காஞ்சன், சில நாட்களுக்கு முன்பு சுலோச்சனா மூச்சுத் திணறல் மற்றும் வயது தொடர்பான பிற நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். இந்நிலையில் அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சுலோச்சனா ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஜூன் 3ம் தேதி சனிக்கிழமையன்று, அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தொடர்ச்சியான ஆக்ஸிஜன் உதவியுடன் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். பின்னர், ஜூன் 4 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மும்பை மருத்துவமனையில் மரணமடைந்தாராம்.
300க்கும் அதிகமான படங்கள்:
1940களில் மராத்தி படங்களில் நடிக்க தொடங்கிய சுலோச்சனா, நடிகர் சம்மி கபூர், திலீப் குமார், தேவ் ஆனந்த், வினோத் கண்ணா, ஜாக்கி ஷெராப் போன்ற முன்னணி நடிகர்களுடன் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலான பாலிவுட் நடிகர்களுக்கு தாயாக நடித்துள்ளார்.
விருது வாங்கிய சுலோச்சனா:
சுலோச்சனாவுக்கு 199 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2009 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசிடமிருந்து மதிப்புமிக்க மகாராஷ்டிரா பூஷன் விருதும் வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025