லாரன்ஸ் மனசு ரொம்ப பெருசு..தலைவரிடம் ஆசீர்வாதம்..'அன்னதானம் செய்ய திட்டம்'..!

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும்,ஹீரோவாகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும்,ஹீரோவாகவும் கலக்கி வருபவர் ராகவா லாரன்ஸ் இன்று தனது 46-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வளைதளத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

unknown node

Happy Birthday Raghava Lawrence [Image Source: Twitter ]

இதற்கிடையில், ரஜினியின் தீவீர ரசிகரான இவர் ரஜினியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்று ஆசீர்வாதம் வாங்கியுள்ளார். ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு நெகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன்-விஷாலுடன் காதல்..? உண்மையை கூறிய நடிகை அபிநயா.!

unknown node

Raghava Lawrence And Rajinikanth [Image Source: Twitter ]

அந்த பதிவில் ” எனது பிறந்தநாளில் தலைவர் மற்றும் என்னுடைய  குருவிடம் ஆசிர்வாதம் பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு வருடமும் நான் ஏதாவது சேவை செய்ய முடிவு செய்கிறேன்.  இந்த ஆண்டு நான் பசியின் மதிப்பை அறிந்து அன்னதானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இடங்களுக்கு நேரில் சென்று உணவு விநியோகம் செய்வேன். எனக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

unknown node

நடித்து வரும் பணத்தை ஏழைகள் மற்றும் மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட  ராகவா லாரன்ஸை பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இவர் தற்போது ரூத்ரன், சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.