அடுத்ததாக ஆக்ஷன் திரில்லர் படத்தில் களமிறங்கும் லாஸ்லியா.! ஹீரோ யார் தெரியுமா.!

லாஸ்லியா அடுத்ததாக அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லாஸ்லியா அடுத்ததாக அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது இவரது அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனரான ராஜா சரவணன் இயக்கத்தில் டில்லி பாபு தயாரிப்பில் உருவாகும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் லாஸ்லியா நடிக்கவுள்ளதாகவும், அதில் பூரனேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு லாஸ்லியா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்ந்தெடுத்ததாகவும், மற்ற நடிகர், நடிகைகள் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

unknown node