3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்குப் பிறகு ,‘லால் சலாம்’ படத்தின் மூலம் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். தற்போது, ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது, இதனை படக்குழு படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய சில கைப்படப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.
unknown nodeLalSalaam [Image Source :@LycaProductions]
இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடித்துள்ளாராம்.
unknown nodeLalSalaam [Image Source : @LycaProductions]
படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபடவுள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில், ரஜினியின் ‘ஜெயிலர்’ நாளை (ஆகஸ்ட் 10) பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
unknown node