தனுஷுக்கு ஜோடியாக சேர்ந்து நடிக்க ஆசை.. மனம் திறந்து பேசிய லைலா.!

16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிகை லைலா கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும்,

16- ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிகை லைலா கார்த்தி நடிப்பில் வெளியான “சர்தார்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமார்சன ரீதியாகவும், நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் லைலா நடித்த கதாபாத்திரமும் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

unknown node

Sardar Laila [Image Source: Twitter ]

இந்த படத்தை தொடர்ந்து லைலாவுக்கு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வருகிறது. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே சூர்யா, அஜித் என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார். இந்த நிலையில், இவரிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்போது உள்ள நடிகர்களில் யாருக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறீகள் என்ற கேள்வி கேட்டகப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன்– பிக் பாஸ் ஆயிஷாவுக்கு 5 காதலர்கள்.. 2 முறை திருமணமா? வெளியான ஷாக்கிங் தகவல்.!

unknown node

Dhanush And Laila [Image Source: Twitter ]

அதற்கு பதில் அளித்த லைலா ” தனுஷுடன் நடிக்க எனக்கு ஆசை உள்ளது. அவருக்கு ஜோடியாக நடித்தால் மிகவும் சந்தோசம் தான்.” என தெரிவித்துள்ளார். லைலாவை போல இப்போது இருக்கும் பல இளம் நடிகைகளும் கூட தனுஷுடன் தான் நடிக்க ஆசை என கூறுகிறார்கள். குறிப்பாக நடிகைகள் ப்ரியா பிரகாஷ் வாரியர், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் தனுஷுடன் தான் நடிக்க ஆசை என்று கூறியிருந்தார்கள்.

unknown node

Captain Miller Dhanush look [Image Source: Twitter ]

மேலும், நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அருண் மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.