நடிகை நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிபிற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மே 10 ஆம் தேதி படத்திற்கான முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை நயன்தாரா படத்தின் படப்பிடிப்பிக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node