கேரளாவை அதிர வைத்த ராக்கி பாய்.! பீஸ்ட் வசூலை முந்திய கேஜிஎப்.!

கேஜிஎப் 1 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது "கேஜிஎப் 2 " பிரமாண்ட பட்ஜெட்டில்

கேஜிஎப் 1 திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது “கேஜிஎப் 2 ” பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தையும் இயக்குனர் பிரசாத் நீர் இயக்கியுள்ளார்.

unknown node

இப்படத்தில் நடிகர் யாஷ் உடன் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

unknown node

படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும். அதைபோல் வரவேற்புக்கு ஏற்றது போல் படத்தின் வசூலும் தாறுமாறாக செய்துள்ளது.

unknown node

அதன்படி கேரளாவில் மட்டும் இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் 7.1 கோடி வசூல் செய்துள்ளது. இதுவரை கேரளாவில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த படம் கேஜிஎப் என்ற சாதனையை படைத்துள்ளது.

unknown node

இரண்டாவது இடத்தில மோகன் லால் நடித்த ஒடியன் படம் உள்ளது இந்த படம் 6.76 கோடி வசூல் செய்திருந்தது . மூன்றாவது இடத்தில விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் 6.6 கோடி வசூல் செய்துள்ளது.