இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன்நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
unknown nodeஇந்த படத்தில் சூர்யா கௌரவத் தோற்றதில் நடிக்கிறார். ஆனால் சூர்யா நட நடிப்பதை படக்குழுவினர் சஸ்பென்சாக வைத்திருந்தார்கள். எதிர்பாராத விதமாக, படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதன் பிறகு, லோகேஷ் கனகராஜே விக்ரம் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூர்யா நடிப்பதை அறிவித்தார்.
unknown nodeஇந்த நிலையில். மாஸ்டர், விக்ரம் படங்களில் வசனம் எழுதிய இயக்குனர் ரத்ன குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய ரத்ன குமார் ” கேஜிஎப் 2 படத்தில் முகத்தை மூடி கொண்டு அதீரா என்று ஒருவரை காமிப்பாங்க ஆனால் அது யாருனு சொல்லமாட்டாங்க.
unknown nodeஇரண்டாவது பாகத்தில் அது சஞ்சய் தத் என்று காமிப்பார்கள். அதை போல தான் விக்ரம் படத்தில் சூர்யா வருவார். இது திட்டமிட்ட பட்ட ஐடியா தான். சூர்யா என்ட்ரிக்கு தியேட்டர் என்ன ஆகப்போகுதுனு தெரியல” என கூறியுள்ளார். இவர் கூறியதை பார்த்த சூர்யா ரசிகர்கள் இன்னும் அதிக எதிர்பார்ப்புடன் படத்தை காண காத்துள்ளார்கள்.