கேஜிஎஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.!

It has been reported that Dream Warriors has acquired the Tamil publishing rights of the KGF-2 film.

கே.ஜி.எஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர்.மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இந்தி உள்ளிட்ட 4 தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இந்த படத்தினை வரும் ஜூலை மாதம் 16 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இந்த நிலையில் கே.ஜி.எஃப் -2 படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கான தமிழக உரிமையை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.