D43 படத்தின் அப்டேட் கொடுத்த கார்த்திக் நரேன்..!!

Director Karthik Narain has posted a new update for the D43 movie on his Instagram page

D43 திரைப்படத்திற்கான புதிய அப்டேட்டை இயக்குனர் கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியான திரைப்படம் கர்ணன் இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜகமே தந்திரம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் பாலிவுட்டில் “அத்ராங்கே” எனும் படத்திலும் நடித்து‌ முடித்துள்ளார்.

அதை தொடர்ந்து தற்போது கார்த்திக் நரேனுடன் “D43” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு தி க்ரே மேன் படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த D43 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்தில் நடிக்கும் மாஸ்டர் மகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்தி நரேனிடம் D43 படத்திற்கான அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன் மிக விரைவில் என்று பதிலளித்துள்ளார்.