எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கிய ‘ஜப்பான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில், கார்த்தியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. வீடியோவை வைத்து பார்க்கும்பொழுது, நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்தி, ஜாலியாக ராக்கெட் ராஜா போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் போல் தெரிகிறது.
தற்பொழுது, இந்த இந்த படத்தின் டப்பிங் பணியை கார்த்தி தொடங்கியுள்ளார் என்று படக்குழு ஓவர் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் கார்த்தி, ஏய், கர்மா-னா என்னனு தெரியுமா டா உனக்கு? நீ அடிச்ச கொன்ன கொசு லாம், ஒரு நாளுக்கு டைனோசர் ‘ஆ’ மாறி உன் முன்னாடி வந்து நிக்கும் என்று பேசுகிறார். இதோ அந்த வீடியோ…
unknown nodeஇந்த திரைப்படம் ஒரு திருட்டு ஆக்ஷன் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் அழகிய நடிகை அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
