இரண்டாவது முறையாக இரட்டை வேடங்களில் மிரட்ட வருகிறார் கார்த்தி..!!

Karthi will be seen in a double role in the upcoming BS Mitran directed film Karthi 22.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகவுள்ள கார்த்தி 22 படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார்.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விடுவார்.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகவும், படம் மிகவும் த்ரில்லராக இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நடிகர் கார்த்தி சிறுத்தை படத்தில் 2 வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.