கர்ணன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் & ரிலீஸ் தேதி நாளை வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

The first look poster of Dhanush starrer Karnan will be released tomorrow at 11 am.

தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11.6 மணிக்கு வெளியாகும் என்றும் படத்திற்கான ரிலீஸ் தேதியும் நாளை அறிவிக்கப்படும் என்றும் படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தற்போது தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.

unknown node