மூணு நாளில கல்யாணம்.! நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடிய 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட நடிகை.!

Naranjani, who starred in the film Kannum Kannum Kollaiyadithaal, is currently celebrating a talk party as she is set to marry director Desingu Periyasamy on February 25.Naranjani, who starred in the film Kannun Kannu Kollayadittal, is currently celebrating a talk party as she is set to marry director Desingu Periyasamy on February 25.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த நரஞ்சனி இயக்குனரான தேசிங்கு பெரியசாமியை பிப்ரவரி 25-ம் தேதி திருமணம் செய்ய உள்ள நிலையில் தற்போது பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடியுள்ளார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நரஞ்சனி அகத்தியன்.இவர் தல அஜித்தின் காதல் கோட்டை படத்தினை இயக்கி தேசிய விருது வென்ற இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு மூன்று மகள்கள் உள்ளதும்,அதில் ஒருவர் குக் வித் கோமாளியில் போட்டியாளராக உள்ள கனி என்பதும் ,அவர் தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய திருவின் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.மற்றொருவர் நடிகை விஜயலட்சுமி என்பதும் ,அவர் சென்னை-28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடித்து ‘பண்டிகை’ படத்தை இயக்கிய ஃபெரோஸ் என்பவரைத் திருமணம் செய்தார்.

தற்போது அவரது மூன்றாவது மகளான நரஞ்சனியும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரான தேசிங்கு பெரியசாமியை மணக்க உள்ளதாக அறிவித்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது .இந்த நிலையில் பிப்ரவரி 25-ம் தேதி பாண்டிச்சேரியில் இந்த காதல் ஜோடியின் திருமணம் நடக்கவுள்ள நிலையில் நரஞ்சனி தனது நண்பர்கள் மற்றும் சகோதரிகளுடன் பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடியுள்ளார் .அந்த புகைப்படங்களை நிரஞ்சனியின் சகோதரியும் ,நடிகையுமான விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown nodeunknown node