கங்குவா படம் பான் இந்தியா தெறிக்கவிடும்! அடித்து சொல்லும் விநியோகஸ்தர்!

kanguva

கங்குவா : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம், கோவை சரளா, ரவி ராகவேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தினை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறது. முதல் பாகம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  விநியோகஸ்தர் சக்தி என்பவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கங்குவா படம் பற்றி பேசி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளார்.

கங்குவா பற்றி அவர் பேசியதாவது ” எனக்கு தெரிந்து ரஜினி சாருக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் ஆந்திர, கர்நாடகா, தமிழ்நாடு என ஒட்டுமொத்த சினிமாவில் கொண்டாட்டப்பட்ட நடிகர் என்றால் சூர்யா தான். தமிழ் சினிமாவில் இருந்து பான் இந்தியா அளவுக்கு செல்லும் முதல் படமாக கங்குவா படம்  இருக்கும்.

கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னிடம் சொன்னார் இந்த படம் முழுக்க முழுக்க நாம் சம்பாதிப்பதற்கான படம் என்று சொன்னார். அதைப்போல படத்தை நான் யார்கிட்டையும் கொடுக்கமாட்டேன் நானே ரிலீஸ் செய்யபோகிறேன் என்று சொன்னார். ஒரு தயாரிப்பாளர் படத்தின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால் கண்டிப்பாக படம் அந்த அளவுக்கு சம்பவம் செய்ய போகிறது.

கண்டிப்பாக கங்குவா படம் பான் இந்தியாவை தெறிக்கவிடும் அளவிற்கு இருக்கும். கங்குவா படத்தில் கங்கா கங்கா கங்குவா என்ற பாடல் இருக்கிறது. அந்த பாடல் முழுக்க முழுக்க வெறித்தனமாக இருக்கும்” எனவும் சக்தி தெரிவித்துள்ளார். இவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் படத்தை பார்க்க இப்போதே ஆவலுடன் ரெடி ஆகிவிட்டார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்