ராயன் வசூலை நெருங்கும் கங்குவா? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!
வெளியான 3 நாட்களில் கங்குவா திரைப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. படம் வெளியானது முதல் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும், கலவையான விமர்சனங்களுமே பெற்று வருகிறது.
ரூ.350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த கங்குவா திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.58.62 வசூல் செய்து சாதனைப் படைத்தது. அதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து, வசூலில் பெரிய அளவில் சம்பவம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விமர்சன ரீதியாக பாதிப்பை சந்தித்ததால் அது வசூலில் பிரதிபலித்துள்ளது.
இருப்பினும், படம் வெளியாகி 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதன் வசூலையும் படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, கங்குவா வெளியான 3 நாட்களில் மட்டும் ரூ.127 கோடி வசூல் செய்துள்ளது. வார இறுதி நாட்களில் இந்த படத்திற்கு சற்று வரவேற்பு கிடைத்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிகிறது.
மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ.150 கோடியை, ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் உருவான கங்குவா திரைப்படம் விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் வரும் நாட்களில் நல்ல ஒரு விமர்சனம் கிடைத்தால் 200 கோடி வசூல் அடிக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
#Kanguva Soaring strong across borders and barriers ????????
Worldwide 3 Day gross: 127.64 Crores ????
Book your tickets here for #Kanguva
???? https://t.co/aG93NEBPMQ #KanguvaRunningSuccessfully@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/1wwqCTHKkH— Studio Green (@StudioGreen2) November 17, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025