தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரித்த கங்கனா ரனாவத்.!!

The leader said on his Twitter page that he has reduced the distance by 20 kg for the film

தலைவி படத்திற்காக 20 கிலோ எடையை அதிகரித்துள்ளதாக ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படம் தலைவி .ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் .

விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளார் . படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” இன்னும் ஒரு நாளில் தலைவி படத்தின் டிரைலர். இந்த காவிய வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது நான் எதிர்கொண்ட ஒரே சவால் 20 கிலோ எடையை அதிகரித்த தான் என்று பதிவிட்டுள்ளார்.

unknown node