இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான படம் கனா. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இந்த படம் பெண்கள் முன்னேற்றம், கிரிக்கெட் போன்ற பல கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைத்துள்ளது. இந்நிலையில், நார்வே நாட்டில் நடைபெற்ற 10-ம் ஆண்டு திரைப்பட விழாவில், இயக்குனர் அருண்ராஜா காமராஜுக்கு, சிறந்த சமூக விழிப்புணர்வு பட இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும், சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்சனுக்கு, சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
unknown node