இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கமல்ஹாசன்.!
பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜனவரி 25-ஆம் தேதி காலமானார்.
புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இலங்ககையில் ஜனவரி 25-ஆம் தேதி காலமானார் . அவருடைய உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்ட பவதாரிணி உடல் சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் நேற்று அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சிம்பு, மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று இரங்கலை தெரிவித்தனர். பின்னர், பவதாரிணி உடல் இளையராஜாவின் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
#RIPBhavatharini : பாடகி பவதாரிணி உடல் நல்லடக்கம்!
இந்த நிலையில், அன்றைய தினம் நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை என்பதால், இன்று பவதாரிணி மறைவுக்கு இளையராஜா இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்