நடிகை ஜோதிகா தமிழில் ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்துகொண்டிருந்த நிலையில், கடந்த 2006-ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து சற்று விலகி விட்டார் என்றே கூறலாம். திருமணத்திற்கு பிறகு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்காமல் தனக்கு ஏற்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே ஜோதிகா நடித்து வருகிறார்.
unknown nodeJyothika Smile [Image Source: Google]
குறிப்பாக இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான உடன் பிறப்பே திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஒரு சில நல்ல கதைகளை கொண்ட படங்களில் மட்டும் ஜோதிகா நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்-நேத்து குவின்ஸி.. இன்னைக்கு மகேஸ்வரி, மைனா.!அசல் கோலார் செய்யும் கோளாறு வேலைகள்…
unknown nodeKaathal – The Core Moive [Image Source: Twitter]
இந்த நிலையில் தற்போது, நடிகை ஜோதிகா மம்முட்டிக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மலையாளத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ‘காதல்: தி கோர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeKaathal – The Core Moive [Image Source: Twitter]
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஜியோ பேபி இயக்குகிறார்.படத்தை நடிகர் மம்முட்டியே தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் மத்தியூஸ் புலிக்கன் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node