ரஜினி ,கமல் ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள். இந்நிலையில் இவர்களின் ரசிகர்கள் இவர்களின் படங்கள் வரும் நாட்களை மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றார்கள்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது அரசியலில் குதித்துள்ளார்கள். ரஜினி நடித்த’ பேட்ட ‘ தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது நடிகர் கமல் ‘ இந்தியன் 2 ‘ படத்தில் நடிக்க இருக்கிறார்.
நடிகர் சங்கம் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அந்த நிகழ்ச்சியில் ரஜினியும் ,கமலும் கலந்துகொள்கிறார்களாம். நீண்ட நாட்களுக்கு பின்பு இளையராஜா 75 இவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சியாகும்.