Joker 2:ஜோக்கர் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘ஜோக்கர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் இயக்குனர் டோட் பிலிப்ஸின் வரவிருக்கும் மியூசிக்கல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஜோக்கர் 2’ அல்லது ‘ஜோக்கர்: ஃபோலி ஏ டியூக்ஸ்’ என்றழைக்கப்படும் இப்படத்தின் புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன் முதல் பாகம், ஜோக்க அக்டோபர் 2, 2019 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது உருவாகி ரிலீஸுக்கு தயாராகி உள்ளது, அதன்படி படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆம், படக்குழு வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
unknown node