ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து, அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது என்றே சொல்லலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் மட்டும் நெட்டிசன்கள் ட்வீட்டரில் தெரிவித்துள்ள விமர்சனத்தை பற்றி பார்க்கலாம் படத்தை பார்த்துவிட்டு “முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் நன்றாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இருவருடைய நடிப்பு அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமற்றோருவர் ” ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் புத்திசாலித்தனமான திரைப்படம். படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் எல்லாம் பார்ப்பதற்கு மிகவும் மிரள வைக்கும் வகையில் இருக்கிறது” என கூறியுள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeஇந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் படம் எத்தனை கோடி வசூல் செய்யபோகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
