Jawan: சாதனை மைல் கல்லில் ஷாருக்கான்! ஜெயிலர் சாதனையை முறியடித்த 'ஜவான்' திரைப்படம்!

பதான் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம்

JawanBoxOffice

பதான் எனும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி படத்தை கொடுத்த நடிகர் ஷாருக்கான் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியானது.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருவது போல் வசூலிலும் படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. படம் வெளியான 10 நாட்களில் மொத்தமாக 797 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், அடுத்ததாக 11 நாட்களில் படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஜவான் திரைப்படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 858 கோடி வசூலை தாண்டியுள்ளதாக  படக்குழு அறிவித்துள்ளது.

வெளியான 11 நாட்களில் ரூ.858.68 கோடி வசூலித்துள்ளதன் மூலம் குறுகிய காலத்தில் மைல்கல்லை எட்டிய படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. இதற்கிடையில், சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் 11 நாளில் வெறும் ரூ.492.50 கோடியை வசூலித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node

தமிழும் படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என்பதற்காக வில்லனாக நடிகர் விஜய்சேதுபதியையும், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் அட்லீ நடிக்க வைத்தார். படத்தில் அவர்கள் நடித்த கதாபாத்திரமும் கொண்டாடப்பட்டடு பாலிவுட்டிலும் இவர்களுக்கு மார்க்கெட் உயர்ந்துள்ளது என்றே கூறலாம்.