தொடர் பிளாக்பஸ்டர்களை வழங்கி, பிரபலமான இயக்குனர் அட்லீயுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ‘ஜவான்’ படத்திற்காக கைகோர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, பிரியாமணி, சுனில் குரோவர் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுபெற மேலும் சில நாட்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஜூன் வெளியீட்டு தேதியை ஒத்திவைக்க முடிவு செய்து அதன் புதிய வெளியீட்டு தேதியை இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக, தளபதி விஜய்யின் லியோ படத்துடன் ஜவான் மோதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ‘ஜவான்’ படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வரை காத்திருக்கலாம்.
இதற்கிடையில், தளபதி விஜய்யை வைத்து தேறி, மெர்சல், பிகில் என தொடர் பிளாக் பஸ்டர்களை வழங்கி, தன்னுடைய பெயரை முத்திரை பதித்துக்கொண்டார் அட்லீ. அந்த வகையில், பலமுறை மேடையில் விஜய்யை தன்னுடைய அண்னன் என்றும் அண்ணனுக்காக தான் செய்வேன் என்றும் கூறியிருக்கிறார். இவ்வாறு இருக்கும்பொழுது, தன் அண்ணனுடன் எப்படி மோதுவார் என்று கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.