Janhvi Kapoor: அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பிரபல பாலிவுட் பாடலான ‘ஜிங்காத்’ பாடலுக்கு ஜான்வி கபூருடன் பாப் பாடகி ரிஹானா நடனமாடினார். அனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழா நேற்று முதல் குஜராத்தின் ஜாம்நகரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
READ MORE –அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!
மூன்று நாள் நடைபெறும் இந்த திருமணத்தின் முந்தைய கொண்டாட்ட விழாவில் கலந்து கொள்ள இந்திய பிரபலங்கள் முதல் உலக பிரபலங்கள் வரை கலந்து கொள்கின்றனர். இதன் தொடக்க நாளான அமெரிக்க பாப் படகியான ரிஹானாவும் தனது இசைக்குழுவுடன் வந்து பாடல்களை பாடி நடனம் ஆடி அசத்தினார்.
READ MORE –அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! மகனை சைலண்டாக களமிறக்கிய தனுஷ்.!
அந்த வகையில், கீழே ரசித்து கொண்டிருந்த தயாரிப்பாளார் போனி கபூரின் மூத்த மகளான நடிகையுமான நடிகை ஜான்வி கபூர் ரிஹானாவுடன் ஜோடியாக ஹாட் நடனம் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அந்த வகையில், அவரே தனது இன்ஸ்டாகிராமில் ரிஹானாவுடன் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
unknown nodeREAD MORE –பட தோல்வியால் அந்த விஷயத்தை செய்த கங்கனா ரனாவத்! உண்மையை உளறிய பயில்வான் ரங்கநாதன்!
இந்த விழாவில், ஜான்வி கபூரை தவிர, ஷாருக்கான், சல்மான் கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், மாதுரி தீட்சித், வருண் தவான், அனில் கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், அனன்யா பாண்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.
