ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் கிராண்ட் இசை வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அறிவிப்பு வீடியோவில், ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.
unknown nodeஇந்நிலையில், இசை வெளியீட்டு விழாவில் ஜெயிலர் படக்குழு அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்திரனாக உலக நாயகன் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, காவாலா, HUKUM பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வரும் நிலையில், மற்ற பாடல்களுக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினிகாந்தின் கடைசிப் படமான அன்னத்தாவுக்குப் பிறகு, ரசிகர்கள் ‘ஜெயிலர்’ படம் குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
unknown nodeJailer wrap [Image source: Sun Pictures ]
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது முந்தைய படங்களைப் போல் இல்லாமல், சிறையில் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
