திரையரங்குகளில் வெளியாகுமா ஜகமே தந்திரம்...??

Jagame Tantram movie is spreading in the theaters for only 15 days.

ஜகமே தந்திரம் திரைப்படம் 15 நாட்கள் மட்டும் திரையரங்குகளில் வெளியாகும் தகவல்கள் பரவி வருகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். y not studios தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 1 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி சென்றது அதற்கு பிறகு இந்த திரைப்படம் “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. அதற்கான டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் 15 நாட்கள் மட்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று 15 நாட்கள் கழித்து “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது .விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

திரையரங்குகளில் வெளியாகுமா ஜகமே தந்திரம்...??