நம்பர் 1 ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் "ஜகமே தந்திரம்" டீசர்...! வெறித்தனமான சாதனை..!

The teaser of Dhanush starrer Jagame Tantra has crossed 8.5 million views on YouTube.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டீசர் யூடியூபில் 8.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது “நெட்பிளிக்ஸ்” ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இதனை தொடர்ந்து இந்த டீசர் தற்போது வரை யூடியூபில் 8.5 மில்லியன் பார்வையாளர்களையும் 5 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இதுவரை தனுஷ் நடிப்பில் வெளியான படங்களின் டீசர் 5 லட்சம் லைக்குகளை பெற்றதில்லை முதன் முறையாக தனுஸ் நடித்த இந்த ஜகமே தந்திரம் படத்தின் டீசர் லைக்ஸ் 5 லட்சம் லைக்குகளை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது.