'வடசென்னையை மாதிரி இருக்கு'.. சொர்கவாசல் படத்திற்கு நெட்டிசன்கள் கூறும் விமர்சனம் இதோ..!!

இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் 'சொர்க்கவாசல்' திரைப்படத்தின் நெட்டிசன்கள் கூறும் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.

Sorgavaasal Twitter Review

சென்னை :ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் தான் சொர்கவாசல்.  சிறைச்சாலைகளையும், சிறைக்கைதிகளையும் அரசு தங்களின் தேவைகளுக்காகப் எப்படி பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதனை மையமாக வைத்து இந்த படத்தினை இயக்குநர் சித்தார்த் விஸ்வநாதன் எடுத்திருக்கிறார்.

படம் பார்த்த பலரும், இதுவரையில் ஆர்.ஜே.பாலாஜி கிண்டலான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து பார்த்த நமக்கு ஒரு சீரியஸ் ஆன பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்துள்ளார்” எனவும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும், சிலர் வெற்றிமாறன் படத்தை பார்ப்பது போல இந்த படத்தில் மேக்கிங் இருக்கிறது என கூறி வருகிறார்கள்.

இந்நிலையில், படத்தினை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்ப்போம்…

unknown node

படத்தை பார்த்த ஒருவர் “சொர்கவாசல் ஒரு உணர்ச்சிகரமான திரைப்படம். ஆர்ஜே பாலாஜியிடம் இருந்து இந்த அளவுக்கு நடிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு அருமையாக நடித்துள்ளார். அவரை போல செல்வராகவன் தனது நடிப்பால் படத்தை அவருடைய பக்கம் திருப்பினார். இசை நன்றாக உள்ளது, 2வது பாதியில் பயங்கரமான காட்சிகள் உள்ளது கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்” என பதிவிட்டுள்ளார்.

unknown node

மற்றொருவர் ” சொர்கவாசல் படம் வடசென்னை படம் போல பக்கா சிறை கதையில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆர்ஜே பாலாஜி தன்னை ஒரு தீவிர நடிகராக இந்த படத்தின் மூலம் நிரூபித்தார்.நட்டி, செல்வா, சானியா ஆகியோரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்தின் இறுதிக்காட்சியில் பொருத்தப்பட்ட பாடல் அருமை” எனவும் பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node