காதலில் விழுந்த டாடா நாயகி அபர்ணா தாஸ்! அந்த லக்கி ஹீரோ யார் தெரியுமா?

Aparna Das : அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்.
சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்று தான். அப்படி இதுவரை பல பிரபலங்களும் காதலித்து திருமணமும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில், தற்போது டாடா படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அபர்ணா தாஸ் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அபர்ணா தாஸ் திருமணம் செய்துகொள்ள போகும் அந்த நடிகர் வேறு யாரும் இல்லை சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் சுதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான தீபக் பரம்போல் தான். இவரும், அபர்ணா தாஸும் இணைந்து மனோஹரம் என்ற படத்தில் நடித்து இருந்தார்கள்.
இந்த படத்திலே இவர்களுடைய கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்திருக்கும். இவர்கள் இருவருமே தற்போது நிஜ வாழ்க்கையிலும் கூட ஒன்றாக போகிறார்களாம். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்களாம். இவர்களுடைய காதலிக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்களாம்.
எனவே, அபர்ணா தாஸ் தீபக் பரம்போல் இருவரும் தன்னுடைய குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். உண்மையில் இந்த தகவல் பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், நம்ப தக்க சினிமா வட்டாரத்தில் இவர்களுடைய திருமணம் உறுதி தான் எனவும் கூறி வருகிறார்கள். இதனையடுத்து, ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

லேட்டஸ்ட் செய்திகள்
IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!
February 23, 2025
தெலுங்கானா சுரங்கப்பாதை விபத்து… உள்ளே சிக்கிய 8 பேரின் நிலமை என்ன? மீட்கும் பணி தீவிரம்!
February 23, 2025
இந்தியா – பாகிஸ்தான் போட்டி: சென்னை கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு.!
February 23, 2025
AUSvENG : ருத்ர தாண்டவம் ஆடிய ஆஸ்திரேலியா! போராடி தோற்ற இங்கிலாந்து!
February 22, 2025
மீண்டும் மீண்டுமா? அஜித்-ன் GBU புது அப்டேட்..! குழப்பத்தில் ரசிகர்கள்!
February 22, 2025