ராக்கி பாயுடன் இணையும் ஷாருக்கான்? புது படத்தின் மிரட்டல் அப்டேட்!!

toxic Shah Rukh Khan

கேஜிஎப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் யாஷ் அடுத்ததாக கீது மோகன்தாஸின் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த திரைப்படத்தினை மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்தின் டைட்டில் டீசர் லுக்கை வைத்து பார்க்கையிலே இந்த படம் அதிரடியான ஆக்சன் படமாக இருக்கும் என கூறப்பட்டது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

கிராமி விருதில் மது அருந்திய பிரபலம்.! வைரலாகும் வீடியோ…

இருப்பினும் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது படத்தில் நடிகர் ஷாருக்கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படம் முழுவதும் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கதாபாத்திரம் இருக்காது என்றும் பெரிய அளவில் பேசப்படும் வகையில் அவருடைய சிறப்பு கதாபாத்திரம் பேசப்படும் எனவும் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஷாருக்கான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்