பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது . பணிக்கு சென்று தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள் தற்போது பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். சிலர் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் பலருக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். ஆனாலும் சிலர் பட்டினியால் வாடி வருகின்றனர். பல மாநிலங்களில் சாப்பாடு இல்லாமல் உயிரை கூட மாய்த்துக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி கருத்தான டுவிட் ஒன்னற பகிர்ந்துள்ளார். அதில் பசி என்றொரு நோய் இருக்கு, அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும், ஓ மை கடவுளே என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவிற்கு பலர் கமென்ட் செய்து வருவதோடு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது.
unknown node