3டி-யில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸின் லுக் இதுவா.? வைரலாகும் புகைப்படம்.!

A photo has gone viral claiming that it is Prabhas' look in the upcoming Adipurush film starring Prabhas.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸின் லுக் என்று கூறி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தன்ஹாஜி எனும் படத்தின் மூலம் பிரபலமான ஓம் ராவத் , சமீபத்தில் பிரபாஸ் அவர்களை வைத்து பிரமாண்ட படம் ஒன்றை இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.’ஆதிபுருஷ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தினை 3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும்,பூஷண் குமார் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ,பிற சர்வதேச மொழிகளில் டப்பிங் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது .

மேலும் இந்த படத்தினை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக இயக்குனர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. ராமாயணம் கதையை தழுவி உருவாக உள்ள இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் , பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதன் பின் ஆதிபுருஷ் படத்தில் சீதையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸின் லுக் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .தாடியின்றி மீசையுடன் செம ஸ்மார்ட்டாக உள்ள பிரபாஸின் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

unknown node