‘சமந்தாவா இது’? எப்படி இருந்தவங்க எப்படி ஆகிட்டாங்க பாருங்க!

Samantha

மும்பை : மெலிந்த தோற்றத்தில் நடிகை சமந்தா இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

நடிகை சமந்தா இன்று காலை சந்தோஷமான செய்தியை அறிவிக்கப்போகிறேன் என அறிவித்து இருந்தார். அந்த சந்தோஷமான செய்தி என்னவென்றால், சமந்தா World Pickleball League 2024 தொடரில் சென்னை அணிக்கு உரிமையாளராகியுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Samantha Ruth Prabhu At Mumbai
Samantha Ruth Prabhu At Mumbai / @Teamtwts2

சென்னை அணியின் உரிமையாளராக பொறுப்பேற்றது பற்றி சமந்தா பேசுகையில் ” எனக்கு சிறிய வயதில் இருந்தே PickleBall  விளையாட்டு ரொம்பவே பிடிக்கும். சென்னை அணியின் உரிமையாளராக நான் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமீபகாலமாக விளையாட்டுகளில் பெண்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, இளம் பெண்கள் பலரையும் விளையாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள்” எனவும் தெரிவித்தார்.

Samantha Ruth Prabhu At Mumbai
Samantha Ruth Prabhu At Mumbai / @Teamtwts2

World Pickleball லீக்கில் சமந்தா சென்னை அணியின் உரிமையாளராக மாறியது ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்தாலும் சமந்தா இப்போது இருக்கும் தோற்றம் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மும்பையில் இந்த லீக் தொடர்பாக நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்ட சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samantha Ruth Prabhu At Mumbai
Samantha Ruth Prabhu At Mumbai / @Teamtwts2

புகைப்படத்தில் முன்பை விட சமந்தா மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கிறார். எனவே, புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவிற்கு என்னதான் ஆச்சு? எனவும் பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு எனவும் ஆச்சரியத்துடன் கூறிவருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்