இனி முதல் சித்தி-2 தொடரில் ராதிகா கேரக்டரில் நடிப்பது இந்த பிரபல நடிகையா.?

It has been reported that Ramya Krishnan or Meena or Devayani are likely to play the role of Radhika in the first series of chitthi-2.

சித்தி-2 தொடரில் இனி முதல் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் அல்லது மீனா அல்லது தேவயானி நடிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஓடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தொடர் ராதிகாவின் சித்தி . சமீபத்தில் அதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது.அதில் நடித்து வந்த ராதிகா சமீபத்தில் தேர்தலில் மும்மரமாக ஈடுபட உள்ளதால் சித்தி-2 தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சித்தி-2 தொடரில் இனி ராதிகாவிற்கு பதில் யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.அதன்படி சித்தி-2 தொடரில் ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் இனிமுதல் ரம்யா கிருஷ்ணன் நடிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அல்லது அந்த கதாபாத்திரத்தில் தேவயானி அல்லது மீனா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் யார் உண்மையாக நடிப்பார் என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.