11 வருடங்கள் கழித்து உருவாகிறதா "மாயாண்டி குடும்பத்தார்" படத்தின் செக்கன்ட் பார்ட்.?

The second part of the 2009 family film Mayandi kudumbathar is in the making.It is said that Gautam Karthik will act in it.

கடந்த 2009-ல் வெளியான குடும்ப படமான மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார்.குடும்பத்தை மையமாக வெளியான இந்த திரைப்படம் அனைவரது கண்ணையும் கலங்க வைத்தது .மறைந்த மதுவரன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சீமான் ,பொன் வண்ணண்,மணி வண்ணன் ,தருன் கோபி ,கேபி ஜெகன் உள்ளிட்டோர் அண்ணன் ,தம்பியாக நடித்து அசத்தியிருந்தார்கள் .

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.11 ஆண்டுகள் உருவாகும் இந்த படத்தை நந்தா பெரியசாமி இயக்குவதாக கூறப்படுகிறது.இவர் ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இந்த படத்தின் பிற விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.